பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி
1 min read
7 people die after drinking spurious liquor in Bihar
20.1.2025
பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தொடர்ந்து 7 பேர் பலியானதைத் தொடர்ந்து அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் மரணம் ஏற்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில் பலியான 7 பேரின் உடல்களும் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அனைத்து இறப்புகளும் லாரிய காவல் நிலைய பகுதியில் பதிவாகியுள்ளது. இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாக அந்தப் பகுதிவாசிகள் தெரிவித்த நிலையில், அதில் ஒருவர் டிராக்டர் விபத்தில் பலியானதாகவும், மற்றொருவர் பக்கவாதத்தில் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறந்தவர்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “எனது சகோதரர் பிரதீப் தனது நண்பர் மனிஷுடன் கள்ளச்சாராயம் அருந்தினார். இருவரும் இறந்துவிட்டனர்” என்றார். பீகாரில் மது விற்பதற்கும் அருந்துவதற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.