தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, பேட்டரி ஆட்டோ
1 min read
Battery auto to Tenkasi District Government Head Hospital
20.1.2025
தென்காசி இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (ஐடிபிஐ வங்கி) மூலம், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, பேட்டரி ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி ,இணை இயக்குனர் நலப்பணிகள் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் மருத்துவர் கீதா வரவேற்று பேசினார்.
ஐ டி பி ஐ வங்கியின் தெற்கு பிராந்திய தலைவர் சால்வின் சிவராமன் மதுரை வங்கிக் கிளையின் மேலாளர் சிவாஜி கணேசன் மற்றும் தென்காசி வங்கி கிளை மேலாளர் முத்துக்குமார் முன்னிலையில், சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பேட்டரி ஆட்டோ ஒன்றினை மருத்துவமனை பயன்பாட்டிற்காக, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளர் இரா.ஜெஸ்லினிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐ டி பி ஐ வங்கியின் தெற்கு பிராந்திய மேலாளர் சால்வின் சிவராமன் பேசும்போது தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் தலைமையில் தமிழகத்தில் சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலனுக்காகஅவரின் வேண்டுகோளுக்கிணங்க,இந்த வாகனத்தை சி எஸ் ஆர் நிதி மூலம் வழங்குகிறோம். மேலும் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து சி.எஸ்.ஆர். நிதி மூலம் பொதுமக்களின் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை வாங்கி வழங்க தயாராக உள்ளோம் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் பேசும்போது ,தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பல நிறுவனங்களிடமும்,தன்னார்வலர்களிடமும் நோயாளிகளின் நலனுக்காக மருத்துவமனைக்கு தேவைப்படும், உபகரணங்களை வாங்கி வழங்கவும்,கட்டிட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் தென்காசி ஸோகோ நிறுவனம் ,தென்காசி ரோட்டரி சங்கங்கள், லயன்ஸ் கிளப், தென்காசி மர வியாபாரிகள் சங்கம், ஆவுடையானூர் சி ஜே மருத்துவமனை , சுரண்டை பொன்ரா மருத்துவமனை, கே. ராஜேந்திரன் ரோட்டரி சங்கம், விடிஎஸ்ஆர்அருணாச்சல் செட்டியார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் தென்காசி மாவட்ட பொதுமக்கள் பலரும் தென்காசி மருத்துவமனைக்கு அன்பளிப்புகள் பல செய்துள்ளனர்.
இந்த பேட்டரி வாகனம் நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்வதற்கும், மருந்து கிடங்கில் இருந்து மருந்துகள் ஒவ்வொரு வார்டுகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். ஏற்கனவே தென்காசி மரபு வியாபாரிகள் சங்கத்தின் மூலம் மருத்துவமனைக்கு மூன்று வருடங்களுக்கு முன் பேட்டரி கார் ஒன்று வழங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி மருத்துவமனைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல உபகரணங்களை வாங்கி வழங்கியும், கட்டிட பராமரிப்பு பணிகளை செய்து உதவிய நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவர்க்கும் தென்காசி மருத்துவமனை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நிறுவனங்கள் சி எஸ் ஆர் நிதியின் மூலம் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனை மேம்பாட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்கி வழங்க முன் வர வேண்டும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் கேட்டுக்கொண்டார். முடிவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் மருத்துவர் ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.
இது நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா ,மருத்துவர் சங்கரி, செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, முத்துலட்சுமி, மூத்த மருந்தாளுனர்கள் ராமச்சந்திரன், கோமதி ,ஆய்வக நுட்புனர் ஹல்க்,மற்றும் அனைத்து மருத்துவமனை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.