பாவூர்சத்திரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
1 min read
District level sports competitions at Pavurchatra
20.1.2025
தென்காசி மாவட்டம்,
பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எம்.பி. ராணிஸ்ரீகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத், தென்காசி நேரு யுவகேந்திரா மற்றும் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி இணைந்து கிராமப்புற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியினை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
100 மீட்டர் ஓட்டம், சிலம்பம், வாலிபால், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்ற 50க்கும் மேற்பட்டோர் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதில் வெற்றி பெறுபவர்கள் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிளகளில் பங்கேற்க தகுதி பெறுவதுடன், இலவசமாக அங்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பயிற்சியாளர் மாஸ்டர் கணேஷ் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட அதிகாரி ஞானசந்திரன் முன்னிலை வகித்தார். தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீகுமார், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை ஆகியேர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, தொழிலதிபர் வைரசாமி, தலைமை ஆசிரியர்சுந்தர்ராஜ், விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன:, கபில்தேவதாஸ், வளர்மதிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.