July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

நியூயார்க்கில் உள்ள பாப்பான்குளம் சாமிசிலையை மீட்க பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்

1 min read

Pon.Manickavel urges to recover 39 stolen Sami idols in Tamil Nadu

20.1.2025
தமிழக கோவில்களில் கடத்தப்பட்ட 280 கோடி மதிப்பிலான 39 சாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ளது. அதனை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றாலத்தில் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல் பத்திரிக்கை யாளர்களிடம் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் கோவிலில் உள்ள பஞ்சசபைகளில் ஒன்றான சித்திர சபையில் ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்க வேல் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் உள்ள திருவெண்காடர் கோவிலுக்கு,
சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு குற்றாலம் வந்தார்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்கள் மூலம் மாதத்திற்கு ரூ.53 கோடியே 75 லட்சம் வரிவசூல் செய்யப்படுகிறது.

இதை ஆண்டுக்கு ஒப்பிடுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து ரூ.428 கோடி வரிவசூலும், தணிக்கை வரி என்ற பெயரில் ரூ.228 கோடியும என மொத்தம் ரூ.656 கோடி, வரிவசூல் செய்யும் தமிழக அரசு, கோவில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கூட வழங்க மறுத்து வருகிறது.

தென்காசி மாவட்டம்
பாப்பான்குளம் வாடாகலை நாயகி உடனுறை திருவெண்காடர் கோவிலில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான வீணாதர தட்சிணாமூர்த்தி சிலையானது 45 ஆண்டுக ளுக்கு முன்பு களவாடப்பட்டது.

அந்த சிலை தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் வசித்து வரும் 10 ஆண்டு கள் சிறை தண்டனை அனுபவித்த சுபாஷ் சந்திரகபூர் என்பவரின் சகோதரியான
சுஷ்மா ஷெரீனிடம் உள்ளது. அவர் தற்போது அந்த சிலையை ரூ.12 கோடிக்கு ஏலம் விடுவதற்காக தயார் நிலையில் உள்ளார்.

மேலும் அவரிடம் ரூ.280 கோடி மதிப்பிலான சுமார் 39 சிலைகள் உள்ளன. இதுதெரடர்பாக பல்வேறு ஆவணங்களை தலைமைச் செயலாளரிடம் வழங்கியும், அதனை மீட்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால்,
மத் திய அமைச்சகத்துக்கும் இது குறித்து கடிதம் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளேன்.

வீணாதர தட்சிணாமூர்த்தி
சிலையானது இன்னும் சில நாட்களில் ஏலம்போகஉள்ள நிலையில் அதனையும் சேர்த்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லை யென்றால் அந்த சிலைகளை மீட்பதற்கான தேவையான நடவடிக்கைகளை சிவபக்தன் என்றமுறை யில் நான் மேற்கொள்வேன்.இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சிவனடி யார்கள் பலர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.