ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
1 min read
Supreme Court stays trial of defamation case against Rahul Gandhi
20.1.2025
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக பாஜக தொண்டர் நவீன் ஜா என்பவர் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜார்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜார்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையை தடை செய்யக் கோரியும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் ராகுல் காந்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் அல்லாத ஒருவர் எப்படி புகார் அளிக்க முடியும் என்று ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.