காரைக்குடியில் ‘வளர் தமிழ்’ நூலகத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
1 min read
Chief Minister inaugurates ‘Valar Tamil’ library in Karaikudi
21.1.2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் இன்று கள ஆய்வு செய்கிறார். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை.கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘வளர் தமிழ்’ நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் அழகப்பா பல்கலை. நுழைவு வாயிலில் திருவள்ளுவர் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலை.துணை வேந்தர் அமைச்சர்கள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.