திருப்பதி கோவிலில் அன்னதானத்துடன் மசாலா வடை
1 min read
Masala Vada with Annadana at Tirupati Temple
21.1.2025
திருப்பதியில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் உணவு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்னதானத்தை மேலும் சுவையுடனும், தரத்துடனும் வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது.
அதன்படி பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் தரமான பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகின்றன. மேலும் உணவில் முந்திரி உள்ளிட்ட சுவை கூட்டக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசாலா வடை வழங்க முடிவு செய்தது.
அதன்படி சோதனையின் முறையில் நேற்று முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் சுட சுட சுவையான மசாலா வடை பரிமாறப்படுகிறது. இதனை பக்தர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து மசாலா வடை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்த திட்டம் வெற்றி அடைந்தால் அனைத்து பக்தர்களுக்கும் மசாலா வடை வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 83,806 பேர் தரிசனம் செய்தனர். 23 352 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.