காசிதர்மம் வரட்டாற்றில் தடுப்பணை கட்ட கோரிக்கை
1 min read
Request to build a check dam on the Kasidharmam river
21.1.2025
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மம் வரட்டாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வலி யுறுத்தி சென்னயில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா ளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் ஙகூறியி ருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், கடையநல் லூர் சட்டமன்ற தொகுதி கடையநல்லூர் வட்டம் காசிதர்மம் கிராமத்திற்கு மேற்கே 6 கிலோமீட்டர் தொலை வில் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் வரட்டாறு உற்பத்தியாகி காசிதர்மம் கிராமத்திற்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலை வில் இடைகால் அணைக் கட்டு அருகில் ஆற்றில் சேர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பொழிவு ஏற்ப டும் போது வரட்டாற்றில் நீர்வரத்து கிடைக்கப்பெ றுகிறது. மேலும் ஆற்றுப்ப டுகையில் 6 ஆயிரத்து 500 மீட்டரில் வரட்டாற்றில் ஒரு பழைய தடுப்பணை உள்ளது. இந்த வரட்டாறு மூலமாக ராஜகோபா லப்பேரிகுளம், அதிவீரராம பேரிகுளம் மற்றும்சிறு கரைக்குடி குளங்கள் வாயி லாக சுமார் 606.50 ஏக்கர்நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
மேலும் வரட்டாற்றில் உள்ள தடுப்பணை கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி அன்று இரவு பெய்த பெரும் மழையினால் வரட் டாற்றில் ஏற்பட்ட வெள் ளத்தால் பழைய தடுப் பணை உடைந்து விட்டது. தடுப்பணை தற்காலிகமாக மணல் மூட்டை கொண்டு சரி செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை நிரந் தரமாக சீரமைப்பதற்கு ரூபாய் ஒரு கோடி மதிப் பீடு செய்யப்பட்டு சம்பந் தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள் ளது. எனவே வரட்டாற்றில் நிரந்தரமாக அணை கட்டவரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி அணைகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கடைய நல்லூர் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் காசிதர்மம்துரை, மாவட்ட அவைத்தலைவர் மாவடிக் கால் சுந்தரமகாலிங்கம், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை, ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதாமோகன்லால், ஆலங் குளம்யூனியன் துணைத் தலைவர் செல்வக்கொடி ராஜாமணி, மாவட்ட பிர திநிதி ஸ்டீபன் சத்யராஜ். வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.