தென்காசி- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு இலவச மாதிரி தேர்வு
1 min read
Tenkasi- Aptitude test free sample for 8th grade students
21.1.2025
தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது.
தென்காசி, மாவட்ட மைய நூலகம், பள்ளிக்கல்வித் துறை இணைந்து தென்காசி மாவட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து இலவச மாதிரித் தேர்வு நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளுடன் தினசரி பள்ளிகளிலும் வீடுகளிலும் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன் எடுத்துச் சொன்னார். இதில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை முதல்நிலை நூலகர் ராமகிருஷ்ணன் மற்றும் நூலகர் ஜெ.சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தென்காசி நகராட்சி 13வது வார்டு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் இரா.வின்சென்ட் வரவேற்றார். மழையையும் பொருட்படுத்தாமல் ஆழ்வார்குறிச்சி, கடையம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை,புளியங்குடி,பாவுர்சத்திரம் உட்பட 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல பள்ளி வளாகத்திலும் மரத்தடியிலும் காத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் 13வது வார்டு தலைமை ஆசிரியர் திருமலை குமார், அறிவியல் ஆசிரியர் பாபு வேலன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள். பொன்னம்பலம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக குமார், கூறினார். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், நுலக முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அடுத்த தேர்வு 02 02.2025 காலை 9:30 மணி முதல் 12 30 மணி வரை தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. முடிவில்
அறிவியல் இயக்க கிளை செயலாளர் சேக் ஒலி வாவா அனைவருக்கும் நன்றி கூறினார்.