புளியங்குடி: பாலியல் புகாரில் போலீஸ்காரர் கைது
1 min read
Policeman arrested in Puliyangudi over sexual assault complaint
22/1/2025
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம்,ஊத்துமலை காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சைலேஷ். (வயது 44) இவர் இதற்கு முன்பு சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது,
இது தொடர்பாக அந்த இளம் பெண் புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக புளியங்குடி மகளிர் போலீசார் போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடைய நல்லூர் இன்ஸ்பெக்டர் க.ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று நாகர்கோ வில் பகுதியில் பதுங்கி இருந்த போலீஸ்காரர் சைலேஷை கைது செய்தனர். பின்னர் அவரை புளியங்குடிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் டிஎஸ்பி வெங்கடேசன் விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்டுள்ள சைலேஷ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்காசி எஸ்பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.