வி.கே.புதூர்: பட்டப்பகலில் அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்
1 min read
SI suspended for entering neighbor’s house in broad daylight near Tenkasi
22.1.2025
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே வீராணத்தில் பட்டப்பகலில் அத்துமீறி அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்த உதவி ஆய்வாளரை தென்காசி எஸ்பி அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். அவருக்கு உடந்தையாக இருந்த காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், வீ.கே. புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருப வர் சதீஷ்குமார். இவர் கடந்த 18ம் தேதி மதியம் வீராணம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பூட்டிய வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். சம்பந்தப்பட்ட
வீட்டின் உரிமையாளர் கதவை திறந்ததை அடுத்து சுதாரித்துக் கொண்ட சதீஷ்குமார் தான் வந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டு மற்றொரு காவலர் கார்த்திக் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
இதை அறிந்த வீராணம் ஊர் பொது மக்கள் உதவி ஆய்வாளர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனக்கூறி அப்பகுதியில் திரண்டு சுமார் மூன்று மணி நேரமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் தென்காசி மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால், ஆலங்கு ளம் டிஎஸ்பி ஜெய பால் பர்ணபாஸ் உள்ளிட்டோர் பேச் சுவார்த்தை நடத் தினர். அப்போது நியாயமான முறையில் விசாரணை நடத்தி
உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித் ததை தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற மறியல் கைவிடப்பட்டது.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்திய நிலையில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமாரிடம் துறை ரீதியாக விசா ரணை நடத்தப்பட்ட நிலையில் தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவருக்கு உதவியாக இருந்த காவலர் கார்த்திக் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.