வி.கே.புதூர்: பட்டா மாறுதலுக்கு ரூ.4,500 லஞ்சம்- விஏஓ கைது
1 min read
VAO arrested for accepting a bribe of Rs. 4,500 for a change of title
22.1.2025
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூபாய் .4,500 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை
தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் சுண் காணிப்பு பிரிவு போலீசார்கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மகன் குமாரவேல் (வயது 52). இவர் தனது தந்தை பெயரில் உள்ள வீட்டின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ராஜாகோபாலபேரி கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பம் செய்து விட்டு வரும்படி கூறியுள்ளார். அதை தொடர்ந்து விண்ணப்பம் செய்த படிவத்துடன் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியை குமாரவேல் சந்தித்துள்ளார். அப்போது அவர் பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
அதற்கு குமாரவேல் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என குமாரவேல், கூறியதை தொடர்ந்து இறுதியாக 4,500 ரூபாய்க்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமாரவேல், தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு பிரிவில் கிராம நிர்வாக அதிகாரி பத்மாவதி குறித்து புகார் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஊழல் தடுப்பு போலீசார் வகுத்த திட்டத்தின்படி குமாரவேல் நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் சுண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பால் சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளர் ரவி, சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வக்கண் ராஜா, வேணுகோபால், பிரபு, கோவிந்தராஜன், தலைமை காவலர் கணேசன், பிரவீனா உள்ளிட்ட போலீசார், பத்மாவதியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத..