20,000 ரூபாய் லஞ்சம்; பரமக்குடி நகரமைப்பு அதிகாரி கைது
1 min read
Paramakudi town planning officer arrested for accepting a bribe of Rs. 20,000
23.1.2025
வீடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் வழங்குவதற்காக, 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பரமக்குடி நகராட்சி நகரமைப்பு அலுவலர் பர்குணன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமான நான்கு மாடி வீடு கட்ட அப்ரூவல் கட்டணமாக, 76 ஆயிரத்து 850 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து பிளான் அப்ரூவல் கேட்டபோது, டி.பி.ஓ., பர்குணன், தனக்கு ஒரு வீட்டு மனைக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும், என கேட்டுள்ளார். தொடர்ந்து பணத்தை வழங்காத நிலையில் பைல்கள் அப்படியே கிடக்கும் என தெரிவித்துள்ளார்.