July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

நாளை இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டி: ரசிகர்களுக்கு இலவச பஸ்

1 min read

India – England T20 match: Free bus for fans

24.1.2025
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நாளை சென்னையில் நடக்கிறது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டிக்கு செல்லும் ரசிகர்களுக்கு மாநகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது . போட்டியை காண டிக்கெட் வைத்திருந்தால், நடத்துனரிடம் காண்பித்து ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.