சொக்கம்பட்டியில் ரூ.21.5 லட்சம் வளர்ச்சிப் பணிகள்- எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
1 min read
MLA lays foundation stone for Rs. 21.5 lakh development works in Sokkampatti.
24.1.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் ரூபாய் 21.50 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ணமுரளி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடையநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி ஊராட்சியில் ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் பைப் லைன் அமைத்தல், ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் தகன மேடை அமைத்தல், ஜெ ஜெ நகரில் ரூ 2.5 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளை மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா அந்தந்த பகுதிகளில் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்களை வைத்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதன், ஒன்றிய கழக செயலாளர்கள் கடையநல்லூர் பெரியதுரை, ஜெயகுமார்,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் வசந்தம் முத்துப்பாண்டி, துணை தலைவர் பெருமையா பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கோபிநாத், இலக்கிய அணி துணை தலைவர் சந்தனபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் பச்சமால், துணை தலைவர் செல்வகுமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராம் பிரகாஷ், மாவட்ட கலை பிரிவு தலைவர் சந்திரகுமார், கிளை செயலாளர் கோபால் பாண்டியன் முத்தையா கருத்தபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.