பாவூர்சத்திரத்தில் நேதாஜி பிறந்த தினவிழா
1 min read
Netaji’s birth anniversary
24.1.2025
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பாவூர்சத்திரமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர போராட்ட மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திருவுருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே. சண்முகசுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் இலஞ்சி மு.காத்தவராயன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அமல்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் எம்.வி.குணம், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா என்ற அருள் பாண்டி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் (எ) ராமசாமி, கிளை செயலாளர் பாலன்பு ராஜா, திருமலை முருகன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.