நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது
1 min read
Actor Ajith Kumar receives Padma Bhushan award
25/1/2025
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். பத்ம விருதுகள் இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.
மொத்தம் 12 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரான வேலு ஆசானுக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.