வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி நியமனம்
1 min read
Indian-origin person appointed to top White House post
25.1.2025
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். அவரது மந்திரிசபையிலும், அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு உயர் பதவிகளிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நியமித்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளி முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக குஷ் தேசாய், குடியரசு கட்சியின் 2024 தேசிய மாநாட்டிற்கான துணை தொடர்பு இயக்குநராகவும், அயோவா மாகாண குடியரசு கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.