தென்காசியில் தேசிய வாக்காளர் தினம் ஆலோசனைக் கூட்டம்
1 min read
National Voters’ Day consultation meeting in Tenkasi
25.1.2025
தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினத்தினை (2025) முன்னிட்டு “வாக்களிப்பது போல் எதுவுமில்லை நான் நிச்சயமாக வாக்களிப்பேன்”வாக்காளர் தினத்தினை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி, மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, தேர்தல் வட்டாட்சியர் ஹென்றி பீட்டர் மற்றும் அனைத்துறை துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.