குற்றாலத்தில் குடியரசு தின பாரம்பரிய மிதிவண்டி பயணம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
1 min read
Republic Day traditional bicycle tour in Courtallam – Collector inaugurates
25.1.2025
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் “குடியரசுதின பாரம்பரிய 13வது மிதி வண்டி பயணம் குற்றாலம்” சைக்கிளிங் யோகிஸ் குழு மிதி வண்டி பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குற்றாலத்தில் குடியரசுதின பாரம்பரிய 13வது மிதி வண்டி பயணம் குற்றாலம்”
40 நபர்கள் கொண்ட சென்னையை சேர்ந்த சைக்கிளிங் யோகிஸ் குழுவினரின் மிதி வண்டி பயணத்தை நேற்று குற்றாலம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்ததாவது,
சென்னையை சேர்ந்த சைக்கிளிங் யோகிஸ் குழுவினரின் மிதி வண்டி விழிப்புணர்வு பயணம் குற்றாலம் ஹோட்டல் தமிழ்நாடு அருகில் இருந்து பொட்டல்புதூர், மணிமுத்தாறு வரை 52 கி.மீ செல்கின்றனர். (25.01.2025) அன்று குடியரசுதின பாரம்பரிய மிதி வண்டி விழிப்புணர்வு பயணம் காலை 7.00 மணி அளவில் ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலத்தில் இருந்து தொடங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வரை 86 கி.மீ செல்கின்றனர். (26.01.2025) அன்று அன்று குடியரசுதின பாரம்பரிய மிதி வண்டி விழிப்புணர்வு பயணம் காலை 6.30 மணி அளவில் ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலத்தில் இருந்து தொடங்கி செங்கோட்டை, மேக்கரை, குண்டாறு அணை வரை 50 கி.மீ சென்று மீண்டும் ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலத்தில் குடியரசுதின பாரம்பரிய மிதி வண்டி பயணம் நிறைவடைகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன், ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் எச்.ஹரிபாபு, சைக்கிளிங் யோகிஸ் (சென்னை), இராமானுஜர் மௌலாளா, குழு கிரிஜாபழனி( சென்னை) ஆகியோர் கலந்துகொண்டனர்.