சுரண்டையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு முப்பெரும் விழா
1 min read
Tamil Nadu Merchants Association’s grand third anniversary celebration in Surandai
25.1.2025
தென்காசி மாவட்டம் , சுரண்டையில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் முப்பெரும் விழா நடைபெற்றது.
சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் மஹாலில் தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் மற் றும் வணிகர்களின் அதிகார பிரகடன மாநாடு ஆலோசனைக் குறித்து ஆலோசனைக் கூட்டம். நிர்வாகிகள் அறிவிப்பு ஆகிய
முப்பெரும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்டராஜா தலைமை வகித் தார். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முத்தையா. திவ்யா ரங்கன், கோல்டன் செல்வராஜ். ஐயப்பன். பாலசுப்பிரமணியன், நாராயண சிங்கம், காம ராஜ், நடராஜன், ராஜேந் திரன் துரை, சந்திரகுமார், பால்ராஜ், திருமலைக் குமார், பால கிருஷ்ணன், சேர்மச்செல்வம், காஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாநில பொதுக்குழு செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் சதக் கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் காளிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்தக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஜாதி. மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து வியாபாரிகளின் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தவும் தயங்காது. ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில் உள்ள சுமார் 10 கோடி வியாபாரிகள் மிகுந்தசிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் தொழிலாளர் நல மருத்து வமனையை விரிவுபடுத்த வேண்டும்.மாறாந்தையில் அமையவிருக்கும் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும், குற்றாலம் வியாபாரிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். புளியங்குடியில் புதிதாக கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தை தலைமையிடம் கண்டு புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். படிதராசு முத்திரை வைப்பதை மூன்று வரு டத்திற்கு ஒருமுறை என மாற்றி உத்தரவிட வேண்டும். மதுரையில் இருந்து சிவகாசி, திருவேங்கடம் வழியாக செங்கோட்டை வரை இயக்கிய இரவுநேர பேருந்தை அரசு பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில திபர் ரத்தினசாமி, நாராயணா கிளாஸ் ரமேஷ். ஆறுமுகம், கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல் முத்து, செய்தி தொடர் பாளர் ராஜ் குமார் மற் றும் தென்காசி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் கந்தசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.