முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்த டாக்டர் செரியன் மரணம்
1 min read
Dr. Cherian, who performed the first heart transplant, has passed away!
26.1.2025
இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்த பிரபல மருத்துவர் கே.எம்.செரியன், பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 82.
இவர் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
கேரளாவின் காயம்குளத்தில் பிறந்த செரியன், வேலுார் கிறிஸ்துவ மருத்துவக்கல்லுாரியில் அறுவை சிகிச்சைப்பிரிவு விரிவுரையாளராக பணியை தொடங்கினார். 1970ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர், கார்டியோ தொராசிக் சர்ஜரியில் மேற்படிப்பை முடித்தார். நியூசிலாந்து, அமெரிக்காவிலும் பணியாற்றினார்.
பின்னர் இந்தியா திரும்பிய அவர், சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் நாட்டின் முதலாவது கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டினார்.
இவர் மருத்துவ துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.