ஈரோடு இடைத்தேர்தல்: கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
1 min read
Erode by-election: 568 additional electronic voting machines allocated
26.1.2025
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கணினி முறையில் ஆணைய இணையதளத்தின் மூலம் கடந்த 13-ந்தேதி அன்று 20 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் 30 சதவீதம் வி.வி.பேடு கருவி சேர்த்து தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் 284, கட்டுப்பாட்டு கருவி 284, வி.வி. பேடு கருவி 308 கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கணினி துணை சுழற்சி முறையில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த பணி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.