தென்காசி உள்பட 4 மாவட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
1 min read
Man arrested for making bomb threats to 4 districts including Tenkasi
26.1.2025
தென்காசி உள்பட 4 மாவட்ட பஸ் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த வாலிபரை தென்காசி போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாமநபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப் போது தென்காசி, தேனி, சேலம், உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பஸ் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பை பலப்படுத்தினர். போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரது பெயரில் வாங்கியது தெரிய வந்தது. அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தபோது, அப்படி யாரும் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து எந்த ஊரில் இருந்து செல்போனில் இருந்து பேசி வெடிகுண்டு மிரட்டல்விடுக் கப்பட்டது? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சேத்தூர் பகுதியில் இருந்துதான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. மேலும் திருச்சி வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த குத்தூஸ் என்பவரது மகன் செய்யது அமீர் (வயது 27) என்பவர் சேத்ததூரில் இருந்து பெண் முகவரி சிம்கார்டு. மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. அவரை சிவகிரி அருகே வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் செய்யது அமீரை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நேற்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில், தென்காசி, தேனி, சேலம் உள்ளிட்ட 4 மாவட்ட பஸ் நிலை யங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்த தென்காசி போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.