பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
1 min read
30 terrorists killed in Pakistan
27.1.2025
பாகிஸ்தானில் 3 வெவ்வெறு சம்பவங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3,000 கிராம் வெடிபொருட்கள், 11 டெட்டனேட்டர்கள், 22 அடி பாதுகாப்பு ஃப்யூஸ் கம்பி, தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பகுதியில் அமைந்துள்ள லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 பயங்கரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், லக்கி மார்வத் மாவட்டத்தில் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், பயங்கரவாத தடுப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 பயங்கரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் சேர்த்து மொத்தம் 26 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.