சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு
1 min read
4 cases registered against Seeman in one day
27.1.2025
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. தி.மு.க. வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோட்டில் முகாமிட்டு அவர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 2-ம் நாளான நேற்று முன்தினம் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பிரசாரத்தை தொடங்கி மரப்பாலம், கச்சேரி ரோடு, மண்டபம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை கூட்டங்களில் பேசினார்.
இந்நிலையில் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் தேர்தல் விதி மீறியதாக சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.