செங்கோட்டை அரசு தலைமை மருத்துவருக்கு விருது
1 min read
Award for Sengottai Government Chief Medical Officer
27.1.2025
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணனுக்கு 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக அளவில் மாநிலத்தில் சிறந்த மருத்துவருக்கான விருது சென்னையில் மருத்துவ பணிகள் இயக்குனர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஆகும் மருத்துவமனை முழுவதும் சுகாதாரமான முறையில் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது மருத்துவமனையில் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது பிரசவ அறுவை சிகிச்சைகள் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சைகள் மருத்துவமனையில் சிறந்த முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது மேலும் மருத்துவமனையில் வரக்கூடிய உள்நோயாளிகளுக்கு பற்பசை சோப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய மஞ்சள் பை வழங்கும் திட்டம் உள்ளது வியாழக்கிழமை தோரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவும் வழங்கப்படுகிறது மேலும் மத்திய அரசின் விருதாகிய காயகல்ப விருது முதல் மற்றும் இரண்டாம் இடம் என இரு முறை மருத்துவமனை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ராஜேஷ் கண்ணன் தலைமை மருத்துவராக பொறுப்பேற்ற பின்பு கடந்த 18 வருடங்களாக இயற்கை எழில் சூழ்ந்த தோட்டங்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கென மெல்லிய இசை இசைக்கப்படுவது என மருத்துவர் ராஜேஷ் கண்ணன் முயற்சியால் இங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக அளவில் மாநிலத்தில் சிறந்த மருத்துவருக்கான விருது சென்னையில் மருத்துவ பணிகள் இயக்குனர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து வானில் அளவில் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.