புதிய சகாப்தம்-130 கி.மீ. வேகத்தில் பாரத் ரெயில்கள்
1 min read
New Era-130 km. Bharat trains at speed
28/1/2025
மத்திய பாஜக அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு ரெயிலையும் தாமே முன்னின்று தொடங்கி வைத்து வருகிறார். 2019 பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது நாட்டில் 130க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவை 8, 16 அல்லது 20 பெட்டிகள் கொண்டதாக காணப்படுகின்றன. அதிகபட்சமாக 760 கிலோமீட்டர் தூரம் வரை இயக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரசின் அதிகபட்ச பயண நேரம் என்பது 9 மணி நேரம் 5 நிமிடங்கள். அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 8 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டருக்கும் மேல், வேகத்தை எட்டக்கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இந்திய ரெயில்வேயில், ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இதனால் சிறப்பு ரெயில் சேவைகள் கணிசமாக 54 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. அதேசமயம், மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரெயில்கள் செல்லும் அளவிற்கு, 23 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.