வழுக்கை தலையுடன் திருமணம் செய்த பெண்
1 min read
A woman who married with a bald head
5.2.2025
பொதுவாகவே பெண்கள் தங்களை அழுகுபடுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அதுவும் மணப்பெண் என்றால் பிரமிக்க வைக்கும் அலங்காரம் இருக்க பல்வேறு விஷயங்களை செய்வார்கள். இதற்காக பிரத்யே ஆடை, நகை என அனைத்தும் அழகாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும் வகையில் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் இந்திய மணப்பெண் ஒருவர் வழுக்கை தலையுடன் திருமணம் செய்த கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது. அமெரிக்க வாழ் இந்தியரான நீஹர் சச்தேவா என்ற அந்த பெண்ணுக்கு அலோபீசியா என்ற குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு இருந்தால் உடலின் சில பகுதிகள் அல்லது அனைத்து பகுதிகளில் இருந்தும் முடி உதிர்தல் ஏற்படுமாம். இதனை ஸ்பாட் வழுக்கை என்றும் அழைக்கின்றனர்.
அலோபீசியா பாதிப்பு காரணமாக நீஹர் சச்தேவாவுக்கு வழுக்கை ஏற்பட்ட நிலையில் அவர் தனது திருமணத்தின் போது வழுக்கையை மறைக்க முயற்சி செய்யவில்லை. மாறாக மிகவும் தன்னம்பிக்கையுடன் வழுக்கை தலையுடனே திருமணம் செய்தார். அதேநேரம், சிவப்பு நிற லெஹங்கா ஆடையில், அழகான நகை அணிந்து சென்ற அவரை, அவரது வருங்கால கணவர் அருண் கணபதி கரம்பிடித்து திருமணம் செய்த காட்சிகள் காண்போரை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் நீஹரின் தன்னம்பிக்கையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.