தற்போது தேர்தல் நடந்தால் பாஜக, தி.மு.க. வெற்றி பெறும்- கருத்துக் கணிப்பில் தகவல்
1 min read
If elections are held now, BJP and DMK will win – opinion poll suggests
13.2.2025
தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் தி.மு.க. கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே – சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவிகிதம், 5 சதவீதம் அதிகரிக்கும் என்றும் இந்தியா டுடே கணித்துள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மக்களின் தற்போதைய மனநிலை குறித்து இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதன்படி தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 343 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது தேர்தல் நடத்தினாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே 39 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 47 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்றால் 52 சதவீத வாக்குகளைக் கைப்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.