மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது; ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
1 min read
5 terrorists arrested in Manipur; arms, ammunition seized
14.2.2025
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.
இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு மற்றும் தவுபல் மாவட்டங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இம்பால் மேற்கில் உள்ள தங்மைபந்த் மற்றும் கெய்சாம்பட்டில் இருந்து தடைசெய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல இம்பால் கிழக்கில் உள்ள குராய் தவுடம் லெய்காயில் இருந்து கேசிபியின் மற்றொரு உறுப்பினரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நடவடிக்கையில், தவுபல் மாவட்டத்தில் இருந்து 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.