குற்றாலம் மெயின் அருவியில் தீயணைப்பு படையினர் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சி
1 min read
Firefighters conduct flood rescue drill at Courtallam Main Falls
14.2.2025
குற்றாலம் மெயின் அருவியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி கள் துறை வீரர்கள் அவசரகால வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
குற்றாலம் மெயின ருவியில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் உள்ள பொங்குமாங்கடலில் விழுந்து சிக்கியவர்கள், தண் ணீரில் சிக்கியவர்கள் மற்றும் மலை மீது சிக்கியவர்களையும் மீட்பது போன்ற அவசரகால வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை தாங்கினார்.இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் உள்ள அனைத்து நிலை களில் உள்ள கமாண்டோ
வீரர்கள் சுமார் 30 பேர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தென்காசி அருள்மிகு செந் திலாண்டவர் பாலி டெக்னிக் கல்லூரி மாணவர்கள், செயின்ட் மேரிஸ் நர்சிங் கல் லுாரி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கமாண்டோ படை வீரர்களுக்கு ஓய்வு பெற்ற எல்லை பாது காப்பு படை வீரர் மைக்கேல் பயிற்சி அளித்தார்.
முடிவில் உதவி மாவட்ட அலு வலர் சுரேஷ் ஆனந்த் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சுரண்டை அலுவலர் நிலைய ரமேஷ், குற்றாலம். சுகாதார ஆய்வாளர் ராஜக ணபதி, தென்காசி சிறப்பு நிலைய அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.