நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா?-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
1 min read
Peace agreement without us? – Ukrainian President Zelensky asks
14.2.2025
ரஷியா – உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது உக்ரைன் உடனான போரால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை புதின் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மாஸ்கோவிற்கு வரும்படி டிரம்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில்,
ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:-
உக்ரைன் சுதந்திரமான நாடு. எங்கள் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்கா-ரஷியா ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். தான் விரும்பியபடி எதுவும் நடக்காததால் பேச்சுவார்த்தை நடத்த புதின் விரும்புகிறார். ரஷியாவுடன் பேச்சு நடத்தும் முன் அமெரிக்கா – உகரைன் சேர்ந்து திட்டம் வகுக்க வேண்டும். புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.