தென்காசி: 2 கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தஇன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
1 min read
Tenkasi: Inspector praised for arresting culprits in 2 murder cases
15.2.2025
தென்காசி பகுதியில் நடைபெற்ற இரண்டு கொலை வழக்குகளிலும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் க .ஆடிவேலை பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நற்சான்றிதழ் வழங்கினார்
தென்காசி மாவட்டம் இலத்தூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட குளத்தில் கடந்த பிப்.11ந் தேதி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த பெண் கமலி கொலை வழக்கில் கொலையாளியான அவரது கணவர் ஜாண் கில்பர்ட் மற்றும் அதற்கு உதவிய ஜாண் கில்பர்ட் தம்பியை கைது செய்த வழக்கிலும்,
மேலும் அதனைத் தொடர்ந்து
கடையநல்லூர் காவல்நிலைய கடந்த 12ந் தேதி தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சிவராஜ் கொலை வழக்கில் கொலையாளியான அவரது மகன் கெளரிராஜை கைது செய்தது குறித்தும் மேற்கண்ட இரு வழக்கிலும் குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கண்டறிந்து கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும் சிறப்பாக பணிபுரிந்த கடையநல்லூர் காவல் ஆய்வாளர் க.ஆடிவேலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.