நடிகர் சத்யராஜ் மகளுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு
1 min read
Actor Sathyaraj’s daughter gets important role in DMK
16.2.2025
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். இவர் மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார். நடிகர் சத்யராஜுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர்.
மகன் சிபிராஜ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அவர் ஹீரோவாக நடித்தார். மகள் திவ்யா சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அரசியல், சமூக விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, கடந்த 19-ம் தேதி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவின் கட்சி கொடியான கருப்பு – சிவப்பை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு – சிவப்பு நிற சேலை அணிந்து அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், கட்சியில் சேர்ந்த 1 மாதத்திற்குள் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப அணியின் துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் திவ்யாவுக்கு திமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.