அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு: செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை
1 min read
AIADMK district in-charges list released: Sengottaiyan’s name not included
17/2/2025
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டமன்ற தொகுதி வாரியக பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது முதலிய பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, அதிமுக அமைப்பு ரீதியாக அமைந்துள்ள 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பெயர் இடம் பெறவில்லை. மாவட்ட பொறுப்பாளர் இல்லாமல் செங்கோட்டையனுக்கு வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.