கீழப்பாவூர் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பூமி பூஜை- அமைச்சர் பங்கேற்பு
1 min read
Keelappavur new Panchayat Union office building ground breaking ceremony – Minister participated.
17.2.2025
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் ,5.90 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தென்காசி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.
அதனைத் தொடர்ந்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க இன்றைய தினம் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், 2024.2025 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காவேரி சீனித்துரை, துணைத்தலைவர் முத்துக்குமார், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இராம. உதயசூரியன், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செ.குழந்தை மணி, த
பால்ராஜ் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.