அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
1 min read
Minister Duraimurugan admitted to hospital
17.2.2025
உடல் நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, காய்ச்சல் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது துரை முருகனின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து துரைமுருகன் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது