புளியரை: காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
1 min read
Puliyarai: 2 arrested for smuggling ganja in a car
17/2/2025
தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய சரகத்தில் வாகன தணிக்கையின் போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேர்களை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவுபடி துணை கண்காணிப்பாளர் தமிழ் இரணியன் மேற்பார்வையில் புளியரை காவல் நிலைய சரகத்தில் வாகன தணிக்கையின் போது இரண்டு கிலோ கஞ்சா சிக்கியது. இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புளியரை காவல் நிலைய சரகத்தில் காரில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் காவல்துறையினர் புளியரை தாட்கோ நகரில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் திரும்ப முயற்சித்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் சீட்டிற்கு கீழ் சுமார் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காரில் வந்தவர்களை ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் விசாரணை செய்த போது அவர்கள் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்த தினேஷ் மற்றும் புளியரை பகவதிபுரத்தை சேர்ந்த ரவிராஜ வர்மன் என்பது தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்த புளியரை போலீசார் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் ஏற்கனவே தினேஷ் மீது கஞ்சா வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.