தென்காசி: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
1 min read
Tenkasi: Tamil Nadu Primary School Teachers’ Alliance General Committee Meeting
17/2/2025
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில் பாலமார்த்தாண்டபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் வைத்து நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாபுத்துரை வரவேற்று பேசினார். கூட்டப்பொருள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மாவட்ட துணைச் செயலாளர்கள் லட்சுமிகாந்தம், செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
துணை பொதுச்செயலாளர் முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
துணை பொதுச் செயலாளர் அவர்களிடம் ரூபாய் 25000 உறுப்பினர் சந்தா நிதி வழங்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
ஜாக்டோ ஜியோ சார்பில் 8 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கெடுத்த அனைத்து இயக்க தோழர்களுக்கும் இப்பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
பிப்ரவரி 25 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் மாவட்ட தலைநகர் அளவிலான மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 1000ஆசிரியர்களை பங்கெடுத்திட வைப்பதற்கான திட்டமிடல் கூட்டங்கள் மற்றும் ஆசிரியர் சந்திப்பு இயக்கங்களை பள்ளிகள் தோறும் சென்று நடத்திட இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது..
மார்ச் 15 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் மகளிர் தின கருத்தரங்கிற்கு தென்காசி மாவட்டத்திலிருந்து அதிக பெண்ணாசிரியர்களை அழைத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
மே 1, 2, 3தேதிகளில் திண்டுக்கல் நகரில் நடைபெறும் மாநில மாநாட்டு நிதி ரசீது புத்தகம் விரைவில் அனைத்து கிளைகளுக்கும் வழங்கப்படும். வட்டாரப் பொறுப்பாளர்கள் விரைந்து மாநாட்டு நிதியை வசூல் செய்து மாவட்டத்திற்குஒப்படைத்திட இப்பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்காசி ராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.