தென்காசி மாவட்டத்துக்கு விரைவில் முதலமைச்சர் வருகை
1 min read
Chief Minister to visit Tenkasi district soon
18.2.2025
தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைப்பதுடன், புதிய திட்டங்களை அறிவிப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தென்காசி மாவட்டத்துக்கு வருகை தர இருப்பதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தென்காசியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திறக்கப்பட வேண்டிய கட்டிடங்கள். விரைவு படுத்தப்பட வேண்டிய பணிகள், எதிர்காலத் தேவைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வருகைதர உள்ளார். எனவே அது தொடர்பான பணிகளை விரைவுபடுத்த கலெக்டருக்கு அறிவுரை வழங்கிஇருக்கிறோம். முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் எதிர் கால தேவைகள் குறித்த பட்டியல் தயார் செய்யப் பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத் தின் வளர்ச்சிக்கு முதல்வர் பல புதிய திட்டங்களை அறிவிப்பார். மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை பார் வையிட இருக்கிறோம் மருத்துவக் கல்லூரிக்கு மூன்று இடங்கள் பரிசீலனையில் உள்ளது. கலெக்ட ரும் சில இடங்களை பரிந் துரை செய்திருக்கிறார். பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் வசதியான இடத்தை தேர்வு செய்து அறிவிப் போம்.
அதேபோன்று சங்கரன்கோவில் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கும் இடம் பார்வையிடச் செல்கிறோம். கீழப்பாவூரில் புதிய யூனியன் அலுவல கத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. சிப்காட் அமைப்பதற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதுவும் தொழில் தொடங்குவோர் இந்த இடத்தை தேர்வு செய்தால் வருவார்கள் என்கின்ற அளவிற்கு வசதிகளுடன் கூடிய இடத்தை தேர்வு செய்து அறிவிப் போம்.
முதல்வர் வருகை தேதி இன்னமும் முடிவாகவில்லை. விரைவில் இருக் கும். நீண்ட காலமாக குடி யிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதில் எல்லா விளக்கமும் இருக்கும் முதல்வர் பட்டாவழங் கும் திட்டத்தை துவங்கி வைப்பார். நமது ஊரில் நான் துவங்கி வைப்பேன். கலெக்டர் அலுவலகம் திறப்பது தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் உள் ளது. அதனை விரைவுப்ப டுத்தி திறப்பதற்கு ஏற்பாடு செய்வோம் தென்காசி மாவட்டத்திற்கு தேவை யான ஆயுதப்படை காவல் மைதானம், குடியிருப்பு அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்படும்.
இவ் வாறு அவர் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.
பழனிநாடார். சங்கரன்கோவில் வழக்கறிஞர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் மா.செல்லத்துரை,தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதிஇந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) .அனிட்டா சாந்தி, உதவி செயற் பொறியாளர்கள் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ஜான் ஆசிர், திரு.முகம்மது இப்ராஹிம், நிர்மல்சிங், உதவி பொறியாளர்கள் மாலிக், சுரேஷ், மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.