தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது- தென்காசி கலெக்டர் தகவல்
1 min read
Tamil Nadu Green Champion Award- Tenkasi Collector Information
18.2.2025
தென்காசி மாவட்டத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படவுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர் களுக்கு அதாவது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி தலா ரூ.1,00,000/- வீதம் பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது.
கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள்/கல்விநிறுவனங்கள்/ குடியிருப்போர் நலசங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்/பசுமைதொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் கணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறு சுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் தொடர்பான பிறதிட்டங்கள்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம். மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் இதற்கான விண்ணப்படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம். தென்காசி அவர்களை அணுகலாம். பசுமை சாம்பியன் விருது 2024-க்கு விண்ணப்பிக்க 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் உரிய இணைப்புகளுடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம். கதவு எண் 31/1 என்.ஜி.ஓ.காலனி, 6வது தெரு, மேலகரம் அஞ்சல், தென்காசி மாவட்டம் -627818 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பலாம்.
இவ்வா அவர் தெரிவித்துள்ளார்.