ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சந்திப்பு
1 min read
Chief Election Commissioner of India meets with President Draupadi Murmu
20.2.2025
டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, புதிதாக பொறுப்பேற்று கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுபற்றிய புகைப்படம் ஒன்றை ஜனாதிபதி அலுவலகம் எக்ஸ் சமூக ஊடகத்தில் இன்று பகிர்ந்து உள்ளது. இதுவரை இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக இருந்த ராஜீவ் குமார் பதவி விலகிய நிலையில், நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.