மெரினா கடற்கரையில் ஆண்-பெண்: ‘கணவன்-மனைவியா?’ என கேட்ட போலீஸ்காரர் பணியிட மாற்றம்
1 min read
Policeman who asked man and woman on Marina Beach: ‘Husband and wife?’ transferred
20/2/2025
சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் ஒரு பெண், ஒரு ஆணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களிடம் சென்று ‘நீங்கள் கணவன்- மனைவியா?’ என கேட்டு விசாரணை நடத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் போலீஸ்காரருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தனது செல்போனில் போலீஸ்காரரை வீடியோ எடுத்த அவர், நீங்கள் எப்படி எங்களை பார்த்து கணவன்-மனைவியா என்று கேட்கலாம்? மெரினா கடற்கரையில் கணவன்-மனைவி மட்டும்தான் அமர்ந்து பேச வேண்டுமா? வேறு யாரும் உட்கார்ந்து பேசக் கூடாதா? உங்களை இப்படி கேட்க சொல்லியுள்ளார்களா? என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.
சென்னை