கும்பமேளாவில் டிஜிட்டல் நீராடலுக்கு ரூ.1100 வசூல்
1 min read
Rs. 1100 collected for digital bathing at Kumbh Mela
22.2.2025
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
இந்நிலையில், கும்பமேளாவில் டிஜிட்டல் நீராட ஒரு கும்பல் ரூ.1100 கட்டணம் வசூலித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கும்பமேளாவில் நீராட நேரில் வரமுடியாதவர்கள் தங்களது புகைப்படங்களை வாட்சப்பில் அனுப்பினால் அப்புகைப்படங்களை திரிவேணி சங்கமம் நீரில் மூழ்கி எடுப்போம் என்று ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதனை ‘மூட நம்பிக்கை’ என்றும் மோசடி என்றும் விமர்சித்து வருகின்றனர்.