July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

அம்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆலோசனைக் கூட்டம்

1 min read

NGO consultative meeting in Ambasamudram

25.2.2025
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு – பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் பணிகள் கடந்த சில மாதங்களாக வெகு வேகமாக நடந்தேறி வருகிறது.
இக்கூட்டமைப்பு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவதால் தற்போது மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி மண்டலத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின்
நிறுவன தலைவரும் சமூக ஆர்வலருமான லயன் ஏ.ஜெயசீலன், நிறுவனர் செயலாளர் எஸ்.அன்பு, துணைச் செயலாளர் ஆர்.அரிமா ஆனந்த், நிறுவனப் பொருளாளர் கா. தாட்சாயணி, மண்டல பொறுப்பாளர் எம்.செல்வி, கன்னியாகுமரி மண்டல சட்ட ஆலோசகர் வழக்கறிகள், தமிழ்நாடு விவேகானந்தா சேவை அறக்கட்டளையின் நிறுவனர் வே. நாகராஜன், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் ). மேரி ஜான்சிராணி, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் R. அந்தோணிசாமி, தென்காசி மாவட்ட பொறுப்பாளர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் வி. அனீஸ் மெல்வின் உள்பட கூட்டமைப்பின் தோழமை அமைப்புகளின் மாவட்ட பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட தமிழ்நாடு & பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மண்டல உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் ‌.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மண்டல உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கும், நோக்கங்களுக்கும் உட்பட்டு நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

முடிவில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் தாட்சாயினி அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.