தென்காசி மாவட்டத்தில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி பெறலாம்
1 min read
Permission to operate mini buses in Tenkasi district can be obtained
25.2.2025
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 43 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க உரிய அனுமதி பெற வரும் 28.02.2025 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தென்காசி மாவட்டத்தில் 43 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க, புதிய அனுமதிக்கான எஸ்.சி.பி.ஏ. விண்ணப்பப்படிவத்தினை பரிவகன் ஆன்லைனில் விண்ணப்பித்து, தென்காசி மற்றும் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசு அரசாணை எண்.33, உள்(போக்குவரத்து-ஐ), நாள்:23.01.2025 மற்றும் தென்காசி மாவட்ட அரசிதழ் எண்:6, நாள்:05.02.2025 ன் படி அறிவிக்கப்பட்ட 43 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க, புதிய அனுமதிக்கான விண்ணப்பங்கள் 10.02.2025 முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது.
எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான எஸ்.சி.பி.ஏ. விண்ணப்பப்படிவத்தினை பரிவகன் மூலமாக ஆன்லைன் விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம்.1500+100 = 1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் 28.02.2025-க்குள் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.