July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: ரெயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்

1 min read

Tenkasi: DMK members destroy Hindi writings at railway stations

25.2.2025
மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து தென்காசி மாவட்ட ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுக நிர்வாகிகள் தார்பூசி அழித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன் தலைமையில் தென்காசி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர திமுக செயலாளர் ஆர் சாதிர் தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் ஆர் எம் அழகு சுந்தரம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே கே ரமேஷ் தென்காசி நகர திமுக அவைத்தலைவர் கிட்டு நகர துணை செயலாளர் பால்ராஜ் ராம்துரை நகர பொருளாளர் அ.சேக் பரித், மாவட்ட பிரதிநிதிகள் நா. பாலசுப்பிரமணியன் செல்வம் வார்டு செயலாளர்கள் வேல் ஐயப்பன் சாரதி முருகன் வழக்கறிஞர் காமாட்சி நகர் முத்து சுப்பிரமணியன் சுதன் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் ஒன்றிய பாஜக அரசின் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்றிஞர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு ரயில்நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்புமை வைத்து அழித்தார். தொடர்ந்து இந்தி திணிப்பை கட்டாயப்படுத்தம் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுகவினர் கோஷமிட்டனர்.

இதில் கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர் க‌.சீனித்துரை, திமுக பொதுக்குழு உறுப்பினர் அருள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் செல்வன், தொண்டரணி அமைப்பாளர் சொசைட்டி சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திர பாண்டி, அன்பழகன் வளர்மதி ராஜன், ஒன்றிய பொருளாளர் வினை தீர்த்தான்,அறங்காவல் குழு உறுப்பினர் காலசாமி, திமுக நிர்வாகிகள் குறும்பலாப்பேரி டால்டன், கபில் ராஜேந்திரன், சுரேஷ், ராஜா சிங், கதிரேசன், மேலப்பாவூர் முருகன் அருண் பிரபு பாண்டியன் செட்டியூர் ஹரி கிருஷ்ணன், அருள்தாஸ், வழக்கறிஞர் ஹரி, கதிரேசன், முத்து பாண்டி, டேனியல், ரிக்கி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைப் போலவே தென்காசி மாவட்டத்தில் மேட்டூர், ரவண சமுத்திரம், கடையம் , உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் உள்ள பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை திமுக நிர்வாகிகள் தார் பூசி அழித்தனர்.கடையநல்லூர் ரெயில் நிலைய போராட்டத்தின் போது ஒருவர் இந்திக்குப்பதில் ஆங்கில எழுத்தை அழித்தார். அப்போ இன்னொரு தொண்டர் அறிவுறுத்தலின் பேரில் இந்தி எழுத்தை அழித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.