துபாயில் நடந்த இ-ஸ்கூட்டர் விபத்தில் இந்திய மாணவி பலி
1 min read
Indian student dies in e-scooter accident in Dubai
28.2.2025
கர்நாடகாவைச் சேர்ந்த இர்ஃபான் ஹுசைன் மற்றும் மெலனி தம்பதியினரின் மகள் ஹுடா ஹுசைன் (வயது 15) உயிரிழந்தார்.
துபாய் அல் நாதா பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். கடந்த 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை இ-ஸ்கூட்டரில் மாணவி ஜுலேகா ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் சென்ற வாகனம் திடீரென மாணவி சென்று கொண்டு இருந்த இ-ஸ்கூட்டர் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் இந்திய மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் இ-ஸ்கூட்டர் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.