பெண்களின் சமூக பொருளாதார நிலை இன்னும் மேம்பட வேண்டும்- ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
1 min read
The socio-economic status of women must be further improved – President Draupathi Murmu’s speech
8.3.2025
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி அவர் பேசும்போது, பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் தனித்துவ பங்காற்றியதற்காகவும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்வாக சர்வதேச மகளிர் தினம் உள்ளது.
நம்முடைய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் ஆக இருக்கிறார்கள். இன்னல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும் பல்வேறு துறைகளில் தங்களுடைய அடையாளங்களை அவர்கள் பதித்து வெற்றி கண்டுள்ளனர் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
எனினும், பெண்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்த நிறைய விசயங்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளை பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்போம்.
சாதனை படைத்த அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன், அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைவதற்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என அவர் கூறினார்.